கோவையில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!

 
Published : Aug 01, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கோவையில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி!

சுருக்கம்

kovai Accident 7 people killed

கோவையில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை சுந்தராபுரத்தில் நடந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோவை-பொள்ளாச்சி செல்லும் மிகவும் பிரதான சாலையாக உள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பேருந்துக்காக பொதுமக்கள் நின்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்யிமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறுகின்றனர். 

இந்த சம்பவத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கார் 150 கிலோமீட்டர் வேகத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த  ஆடி கார் பாண்டிச்சேரி பதிவெண் கொண்டது.

அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!