உஷார் மக்களே!! கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை..

By Thanalakshmi V  |  First Published Aug 4, 2022, 11:50 AM IST

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு அதிகரித்துள்ளதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 


கீழணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 32 ஆயிரமாக உள்ளது. கீழணையில் 9 அடி மட்டுமே தேக்க முடியும் என்பதால், உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீரின் வரத்துக்கு ஏற்றவாறு வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க:மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.! காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..பொதுமக்கள் வெளியேற்றம்

Tap to resize

Latest Videos

இந்நிலையில் கர்நாடகவில் காவிரியில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி 1.85 லட்சம் கன அடியாக உள்ளது. இதன் அளவு 2.10 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் விநாடிக்கு 2 லட்சம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:Tamilnadu Rain: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

இதனால் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    

click me!