மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.! காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..பொதுமக்கள் வெளியேற்றம்

By Ajmal KhanFirst Published Aug 4, 2022, 10:14 AM IST
Highlights

தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
 

2 லட்சம் கன அடி நீர் திறப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக கேரளா போன்ற இடங்களில் மழையானது அதிக அளவு பெய்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து  83 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.60,000 கன அடியில் இருந்து 1,75,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றம் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 23,000 கன அடியும், 16 - கண் மதகு வழியாக 1,52,000 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.தற்போது நிலவரப்படி வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் பதினாறு கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணைக்கு ஒட்டி உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் உள்ள பகுதிகளில்  தண்ணீர் தற்போது சூழ்ந்துள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி பகுதிக்கு செல்லும் சாலையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

தென் மேற்கு பருவ மழை தீவிரம்:வைகை, சோத்துப்பாறை அணை திறப்பு..! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதே போல ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தற்போது 2 லட்சம் கன அடி நீர் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பவானியில் உள்ள காவேரி வீதி, கந்தன் தெரு, செம்படவர் வீதி பழைய பஸ் நிலையம் பகுதி காமராஜர் நகர் காவிரி கரை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது.இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள்,  கந்தன் பட்டறை, காமராஜர் நடுநிலைப்பள்ளி, திருமண  மண்டபங்களில் ஆகிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் பார்வையிட வர வேண்டாம் என்றும் இளைஞர்கள் செல்பி எடுக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டு்ள்ளது. 

இதையும் படியுங்கள்

Tamilnadu Rain: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

click me!