கொள்ளிடம் ஆற்றில் பயங்கரம் ! படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் மாயம்?

By Selvanayagam P  |  First Published Sep 11, 2019, 10:01 PM IST

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை படகில் கடக்க முயன்ற போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 பேர் சென்ற நிலையில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
 


அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் எதிர் கரைகளில் மேலராமநல்லூர் மற்றும் கீழராமநல்லூர் என இரண்டு ஊர்கள் அமைந்துள்ளன. மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அந்தபகுதி மக்கள் உள்ளனர் தற்போது . கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர்வரத்து இருந்துள்ளது.

Latest Videos

undefined

இந்நிலையில் இன்று  மாலை அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு ஒரு படகில் 30 பேர் சென்றுள்ளனர்.  ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக படகு  கவிழ்ந்தது. 

இந்த விபத்தில்சிக்கியவர்களில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், மேலும் 10 பேர் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் தஞ்சம் அடைந்தனர்.

படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மாயமானவர்களை தேடும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

click me!