சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 10  ஆக உயர்ந்த சோகம்…

Asianet News Tamil  
Published : Jul 24, 2017, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து…. உயிரிழந்தோர் எண்ணிக்கை 10  ஆக உயர்ந்த சோகம்…

சுருக்கம்

kodungaiyur fire accident .... death role rise to 10

கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த போது உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்தது.

அப்போது  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் தீயில் கருகி பலியானார். மேலும் 3தீயணைப்பு வீரர்கள், 6 போலீசார்கள் உள்பட 48 பேர் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தீயில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேக்கரியின் உரிமையாளர் ஆனந்தன், அவருடைய உறவினரான மகிலவன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.

நேற்று காலை பார்த்திபன் என்பவரும் மாலையில் மற்றொருவரும்  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக  இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை நரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடத்து பேக்கரி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!