இரவு நேரத்தில் மனைவியிடம் தனியாக பேசியவருக்கு அரிவாள் வெட்டு; கணவர் தலைமறைவு…

Asianet News Tamil  
Published : Jul 24, 2017, 08:21 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
இரவு நேரத்தில் மனைவியிடம் தனியாக பேசியவருக்கு அரிவாள் வெட்டு; கணவர் தலைமறைவு…

சுருக்கம்

cut the one who spoke alone with his wife at night Husband escape

விருதுநகரில்

ராஜபாளையத்தில் மனைவியிடம் இரவு நேரத்தில் அடிக்கடி தனியாக பேசியவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கணவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுரு (45).

இவர், ஐயனாபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மனைவியிடம் அடிக்கடி தனியாகப் பேசி வந்தாராம். இதைக் கண்ட சுந்தரம் அவரைக் கண்டித்துள்ளார்.

கடந்த வாரம் இரவு இருவரும் தனியாகப் பேசியுள்ளனர். இதனை சுந்தரம் பார்த்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த கண்டித்த பின்னும் என் மனைவியுடன் பேசுகிறாயா? என்று சிவகுருவை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

வெட்டுக் காயமடைந்த சிவகுருவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இதுகுறித்து கீழராஜகுலராமன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தப்பியோடிய சுந்தரத்தின் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து விசாரணையும், அவரை தேடியும் வருகின்றனர் கீழராஜகுலராமன் காவலாளர்கள்.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!