
ஜெயலலிதாவிக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளியை தமிழக போலீசார் கேரளாவில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 500 க்கும் மேற்பட்டோர் பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஜெ. உயிருடன் இருந்தபோது அவர் அடிக்கடி கொடநாடு சென்று ஓய்வெடுத்து வருவார். அவருக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு களை இழந்து காணப்படுகிறது.
இந்நிலையில் அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.. மேலும் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் காயங்களுடன் கட்டிப்போடப்பட்டிருந்தார்.
கிஷன் பகதூரை மீட்ட காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். முதலில் ஜெ,வின் அறை உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் முன் விரோதம் காரணமாக கிஷன் பகதூர்தான் சக காவலாளியை கொன்றதாக கூறப்பட்டது
இந்நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த ஒருவரை தமிழக போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
கேரள மாநிலம் அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் இதற்காக சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.