மர்ம நாடாக மாறிய கொடநாடு... - சூப்பர்வைசரை சிக்கலில் மாட்டிவிட்ட மேனேஜர்!!

First Published May 20, 2017, 12:39 PM IST
Highlights
kodanadu estate manager makes trouble for supervisor


ஜெயலலிதா இருக்கும் வரை இரும்பு கோட்டையாக இருந்த கொடநாடு எஸ்டேட், அவரது மறைவுக்கு பின்னர், மர்ம கோட்டையாக மாறி விட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் நடராசன் என்பவர் மேனேஜராக இருக்கிறார். இவர், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்.

இது தவிர, எஸ்டேட்டில் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, ஒரு சூப்பர்வைசர் மூலம் மாதம் தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக சூப்பர்வைசர் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்படவில்லை. மேனேஜர் நடராசன் கேட்டு கொண்டதன் பேரில், வேறு வழியின்றி தமது சேமிப்பையும், நகையையும் அடகு வைத்து, தொழிலாளர்களின் சம்பளத்தை கொடுத்திருக்கிறார் சூப்பர்வைசர்.

ஆனால், அதன்பிறகு, அவருடைய கணக்கில் பணம் செலுத்தாத மேனேஜர், ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தை சூப்பர்வைசரிடம், சின்னம்மா சசிகலா கொடுத்து விட்டதாக, தொழிலாளர்களிடம் கூறி இருக்கிறார்.

அதனால், பொய் சொல்லி என்னை இப்படி மாட்டி விட்டு விட்டாரே? என்று புலம்பிய சூப்பர்வைசர், அவரை எதிர்த்து கேட்டால், ஆபத்து வரும் என்று பயந்து, விவேக்கை பார்ப்பதற்காக, போயஸ் தோட்டம் வந்திருக்கிறார்.

அங்கு அவரை பார்க்க முடியாததால், கொடநாட்டுக்கும் போக முடியாமல், சென்னையிலும் தங்க முடியாமல் சூப்பர்வைசர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலாவும், தினகரனும் சிறையில் இருக்கின்றனர். மற்ற உறவுகளும், மத்திய அரசுக்கு பயந்து கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்தில் தலையிடாமல் இருப்பதால், மேனேஜர் நடராசன் இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளட்டும், தொழிலாளர்கள் வாழ்க்கையோடு விளையாட வேண்டுமா? என்றே பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

click me!