கொடநாடு காவலாளி கொலை வழக்கு - குற்றவாளிகளின் கார் பறிமுதல்...

First Published May 9, 2017, 7:12 PM IST
Highlights
Kodanad guilty murder case - criminals car seized


கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்பு உடைய குற்றவாளிகளின் காரை கேரள போலீசார் பறிமுதல் செய்து கோத்தகிரி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தனிப்படை போலீசார் கேரளாவில் காரை பறிமுதல் செய்து கோத்தகிரி நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.

 

click me!