கொடநாடு வழக்கு: கனகராஜின் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

By Raghupati R  |  First Published Sep 16, 2023, 7:32 PM IST

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான கனகராஜின் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொடநாடு கொலை கொள்ளை வழக்கை  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த கனகராஜின் அண்ணன் தனபால், கொடநாடு பங்களாவில் இருந்து 5 பைகளில் கனகராஜ்  ஆவணங்களை எடுத்து வந்ததாக புதிய தகவல் ஒன்றை தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் இது குறித்து  விசாரணை நடத்த தனபாலுக்கு சிபிசிஐடி போலீசார்  சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இன்று காலை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபால் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி எஸ்.பி மாதவன்  தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

Latest Videos

undefined

சிபிசிஐடி விசாரணைக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தனபால், “சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி இருப்பதால்  விசாரணைக்காக வந்திருப்பதாகவும்,கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஐஜி சுதாகர் தலைமையில் விசாரணை நடத்தினர். இப்போது  சிபிசிஐடி விசாரிப்பதால் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்” என்றும் கூறினார்.

இன்று காலை வீட்டிலிருந்த தனபாலுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சோலி முடிஞ்சு.. உடையும் இந்தியா கூட்டணி.. இளம் தலைவருக்கு பாதிப்பு: பிரபல நாடி ஜோதிடர் பாபு கணிப்பு !!

click me!