கோடம்பாக்கத்தில் பயங்கரம் - பால்கனி இடிந்து விழுந்து தொழிலாளி பலி

First Published Nov 28, 2016, 6:03 PM IST
Highlights


கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் பால்கனி இடிந்து விழுந்ததில் அதில் வேலை செய்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். 
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் 9 வது குறுக்கு தெருவில் ராம் என்பவர் சொந்தமாக கட்டிடம் கட்டி வருகிறார். இவர் வுட் இண்டியா இண்டீரியர் என்ற நிறுவனத்தை நடட்த்தி வருகிறார். 

கட்டிட வேலையில் திருவேற்காட்டை சேர்ந்த கர்ணன் (35) எனபவர் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டிவனம் ஆகும். திருமணமாகி குழந்தை இல்லை. இன்று வழக்கம் போல் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். 

கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து பூச்சு வேலைகள் நடந்து வந்தது. கர்ணன் பால்கனியில் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டிடத்தின் பாலகனி அப்படியே இடிந்து விழுந்தது. 

இதில் இரண்டாவது மாடியிலிருந்து கர்ணன் கீழே விழுந்தார். உடைந்த பால்கனி சுவர்கள் அவர் மீது விழுந்தது. இதில் அவர் தலை கைகால்கள் ,நெஞ்சு பகுதி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்ப்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கர்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கட்டிட உரிமையாளர் மற்றும் கட்டிட காண்ட்ராக்டரையும் விசாரித்து வருகின்றனர்.

click me!