பிரதமர் மோடியை கொல்ல திட்டம் - மதுரையில் பதுங்கியிருந்த 3 அல்கொய்தா ஆதர்வாளர்கள் கைது

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
பிரதமர் மோடியை கொல்ல திட்டம் - மதுரையில் பதுங்கியிருந்த 3 அல்கொய்தா ஆதர்வாளர்கள் கைது

சுருக்கம்

பிரதமர் மோடியை கொல்லவும் , பல இடங்களில் குண்டு வைக்கவும் திட்டம் தீட்டி மதுரையில் பதுங்கியிருந்த  அல்கொய்தா பயங்கரவாத  இயக்கத்தை நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர்  கைது செய்துள்ளனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

அல்கொய்தா இயக்கம் அமெரிக்காவால் அன்றைய சோவியத் யூனியனுக்கு எதிராகவும் , சோவியத் ஆதரவு பெற்ற அன்றைய ஆப்கன் அரசுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பாகும். 

எதற்கும் கவலைப்படாத கொடூர எண்ணங்கொண்ட அமைப்பினர்கள் ஆவர். பிற்போக்குதனமாக இஸ்லாமிய சிந்தனைகளை தவறாக புரிந்து கொண்டு அதை வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணிக்கும் இந்த அமைப்பின் தலைவராக பின் லேடன் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக இந்த அமைப்பு திரும்பியது. 

அமெரிக்காவில் ரெட்டை கோபுரத்தை தகர்த்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஆப்கானிஸ்தானை அழிக்க போர் தொடுத்தது. இதில் அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் பின்லேடன் அழிக்கப்பட்டார். ஆனாலும் இந்த இயக்கம் இன்றும் இயங்கி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் , ஆப்கன் நாடுகளில் தனது கொடூர செயல்களை அரங்கேற்றி வருகிறது. 

இந்தியாவிலும் அல்கொய்தா , ஐஎஸைஎஸ் அமைப்பை அமைக்கும் முயற்சியில் இது போன்ற தீவிர எண்ணங்கொண்டவர்களை கண்டெடுத்து தயார்படுத்தும் வேலையில் அல்கொய்தா அமைப்பினர் ஈடு பட்டு வருகின்றனர். 

இவ்வாறு தயார் படுத்தப்படுபவர்கள் மக்களோடு மக்களாக இருப்பபவர்களே. இதனால் லோக்கல் போலீசார் , மற்றும் நுண்ணறிவு போலீசாரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்து கைது செய்து வருகிறது.

இந்நிலையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு அல்கொய்தா அமைப்பு அமைக்கப்பட்டுள்ள ரகசிய தகவல் என்.ஐ.ஏ அமைப்பினருக்கு கிடைத்தது. ரகசிய புலனாய்வு மேற்கொண்ட அவர்கள் மதுரையில் பதுங்கியிருந்த  கரீம், அயூப், அப்பால் அலி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள்  6 நாட்டு தூதரகங்களுக்கு மிரட்டல் விடுத்ததும் , பிரதமர் உள்ளிட்ட 22தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது.

இவர்களுடன் தங்கியிருந்த  ஹக்கீம், தவூத் சுலைமான்  என்ற இரண்டு பேர் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க என்.ஐ.ஏ அமைப்பினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரவுடி பொன்னை பாலுக்கு ஜாமீன்.. காலில் விழுந்து கதறல்.. நடந்தது என்ன? ரிவென்ஞ் எடுக்க காத்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு
கருத்துக்கணிப்பு சதவீதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என வையாபுரி பேச்சு