Kodaikanal crowd :கொடைக்கானல் போறிங்களா..!அனால் இது கட்டாயம் ..படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

By Thanalakshmi VFirst Published Jan 14, 2022, 3:11 PM IST
Highlights

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 17,934 ஆக இருந்த நிலையில் நேற்று கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,977 அதிகரித்து 20,911 ஆக பதிவாகியுள்ளது. 1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 20,911 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,218 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 8,218 ஆக உள்ளது. தமிழகத்தில் 20,886 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் என 20,911 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இரவு ஊரடங்கு,முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை காரணமாக மலைகளின் இளவரசி கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இதனால் கொடைக்கானல் சோதனை சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சீராக உள்ளது.இதையடுத்து கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

click me!