
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். மாநிலங்களவையில், கனிமொழி எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுனார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த அகழ்வராய்ச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் கூடிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சியில் கீழடியில் இருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பொருட்கள், 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசும்போது, கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 2,160 ஆண்டுக்கு முற்பட்டதாகவும் மற்றொரு பொருள், 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து, அமெரிக்காவின் பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.