காவேரி மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டன!! யாருக்கும் அனுமதி இல்லை

Published : Aug 07, 2018, 05:20 PM IST
காவேரி மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டன!! யாருக்கும் அனுமதி இல்லை

சுருக்கம்

காவேரி மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டன. வெளியாட்கள் மருத்துவமனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காவேரி மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. வெளியாட்கள் யாரும் மருத்துவமனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் உடலுறுப்புகளை சீராக இயங்க வைப்பது சவாலாக இருப்பதாகவும் நேற்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டது. 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை தெரிவித்திருந்தது. 

சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ள தொண்டர்கள் கதறி அழுதனர். காவேரி மருத்துவமனை, கோபாலபுரம், அண்ணா அறிவாலயம், ராஜாஜி ஹால் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவேரி மருத்துவமனைக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையின் கதவுகள் மூடப்பட்டன. இதையெல்லாம் பார்த்து தொண்டர்கள் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!