ராணுவ பணியை விட்டு கோவையில் சலூன் கடை திறந்த உடுமலை கவுசல்யா சங்கர்..!

By Ajmal KhanFirst Published Sep 26, 2022, 11:33 AM IST
Highlights

ஜாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யா சங்கர், வெலிங்டன் ராணுவ பணியை விட்டுவிட்டு தற்போது சலூன் கடை ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபல நடிகை பார்வதி  ழ என்கிற புதிய சலூன் கடையை இன்று திறந்து வைத்தார்.

காதல் திருமணம்- வெட்டி கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு கவுசல்யா வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், கவுசல்யா கண் எதிரிலேயே சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முற்பட்டபோது கவுசல்யாவிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்தவமனையில் சிகிச்சை பெற்ற கவுசல்யா உடல்நலம் தேறினார். 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், பட்டப்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றது

 குடும்பத்திற்கு எதிராக புகார்

தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தனது தந்தை மற்றும் குடும்பத்திற்கு எதிராக வழக்கில் சாட்சியம் அளித்தார். இதன் காரணமாக கவுசல்யாவின் உறவினர்களுக்கு தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் சக்தி என்பவரை கவுசல்யா மறுமணம் செய்தார். அத்துடன் ஜாதி ஆவணப் படுகொலைக்கு எதிராகவும் கவுசல்யா குரல் கொடுத்து வந்தார். 

பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..! டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர்

ழ சலூன் கடையை திறந்த கவுசல்யா

தற்போது மத்திய அரசுப் பணியான வெலிங்டன் ராணுவ மையப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற கவுசல்யா, கோவை வெள்ளலூர் பகுதியில் 'ழ' என்ற சலூன் கடையை தொடங்கி உள்ளார். அந்த கடையின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழில் பூ, மரியான், மலையாளத்தில் பெரிய அளவு வெற்றி பெற்ற சார்லி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை பார்வதிகலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி கடையினை திறந்து வைத்தார்.

சமூகத்திற்கு முழு பங்களிப்பு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா சமூக வேலைகளை முழு நேரம் செய்ய வேண்டும் என்பதற்காக சலூன் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளேன். இனி சமூகத்திற்கு எனது முழு பங்களிப்பை அளிப்பேன். அதுமட்டுமின்றி என்னைப் போன்ற பெண்கள் தொழில் முனைவோராக உதவி செய்வேன் என கூறினார். முன்னதாக பேசிய நடிகை பார்வதி, கெளசல்யா வாழ்க்கையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, "நான் நடிப்பேனா எனத் தெரியவில்லை. அப்படி ஒரு ப்ராஜ்க்ட் இருந்தால் என்னால் முடிந்த சப்போர்ட் பண்ணுவேன்" என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை திசை திருப்பும் திருமா, சீமான்? விசிகவை தடை செய்ய வேண்டும்- எச்.ராஜா ஆவேசம்

 

click me!