எனக்கு இதயம் இருக்கு! ஹார்ட் ஆபரேஷனுக்கு வைத்திருந்த பணத்தை கேரளாவிற்கு தந்த தமிழச்சி

By Maruthu Pandi Santhosam  |  First Published Aug 20, 2018, 6:30 PM IST

அட்சயா எனும் ஏழாவது படிக்கும் சிறுமி தன்னுடைய இருதய ஆப்ரேசனுக்கு வைத்திருந்த பணத்தில் ருபாய் 5000  நிவாரண நிதியாக அளித்து தமிழக மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


1924 ஆம் ஆண்டிற்கு பிறகு வந்த வரலாறு காணாத வெள்ளத்தில் கேரளவே நிலை குலைந்து காணப்படுகின்றது. எங்கு பார்த்தாலும் மக்கள் தங்களது உடைமைகளையும், உறைவிடங்களையும் இழந்து நிற்கும் காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்கின்றது. மீட்ப்பு பணியில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டாலும் உயிர் சேதங்களின் எண்ணிகையை குறைக்கமுடியவில்லை. இன்று வரை மட்டும்  400 க்கும் மேற்பட்ட உயிர்களை இந்த வெள்ளத்தால் இழந்துள்ளது கேரளா. மாட மாளிகைகளில் வசித்தவர்கள் கூட உண்பதற்கு  உணவின்றி ரோட்டில் நிற்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். 

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தற்பொழுது உதவி செய்து வருகின்றனர். தமிழகத்தினை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் நிவாரண பொருட்களை திரட்டி அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து கொடுத்து வருகின்றனர். மேலும், சிறுவர், சிறுமியர் கூட தன்னார்வமாக வந்து தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணங்களை கொடுப்பது நெகிழ்ச்சியை வரவைக்கின்றது 

Latest Videos

இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள குமரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - ஜோதிமணி தம்பதியின் மகள், அட்சயா எனும் ஏழாவது படிக்கும் சிறுமி தன்னுடைய இருதய ஆப்ரேசனுக்கு வைத்திருந்த பணத்தில் ருபாய் 5000  நிவாரண நிதியாக அளித்து தமிழக மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

ஏழை குடும்பத்தினை சேர்ந்த அட்சயா பிறக்கும் பொழுதே இருதயத்தில் பிரச்னையோடு பிறந்தவள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவளது இருதய பிரச்னை அதிகரித்ததை தொடர்ந்து கரூரில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை லட்சம் வரை செலவு செய்து சென்னையில் ஆபரேஷன் செய்து வைத்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை அந்த சிறுமிக்கு இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமாம். இந்த ஆண்டின் இறுதியில் நடக்க விருந்த அறுவை சிகிச்சைக்காக சேர்ந்திருந்த பணத்தில் 5000 ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.  

click me!