10 வேண்டாம் 25 ந்து கொடு...! தவறினால் தமிழ்நாடே கலவரபூமியாகும்..! கருணாஸ் எச்சரிக்கை..!

 
Published : May 23, 2018, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
10 வேண்டாம் 25 ந்து கொடு...! தவறினால் தமிழ்நாடே கலவரபூமியாகும்..! கருணாஸ் எச்சரிக்கை..!

சுருக்கம்

karunas against tamilnadu goverment

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றது. பொதுமக்கள் கலந்து செல்லாததால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை வன்மையாக கண்டித்து நடிகரும் எம்.எல்.ஏ வுமான கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் அமைதியாக அறவழியில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுடைய போராட்டம் 100 நாட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கலந்து போகாததால்...

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை அழைத்து இந்த அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக செயல்பட நினைக்காமல் பேரணி நடத்திய மக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக்க தாக்கி அது மிகப்பெரிய கலவரமாக வன்முறையாக வெடித்து துப்பாக்கிச்சூடு வரை நடத்தியிருப்பது கொடூரத்தின் உச்சம் என்று கூறியுள்ளார்.

மேலும் தன் சொந்த மக்கள் ஜனநாயக வழியில் போராடும் போது மக்களைக் காக்க வேண்டிய அரசு யாரையோ திருப்தி படுத்த மக்களை காவுகொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்! மக்களின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும்! துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்திற்கு ரூபாய் 25 இலட்சம் என ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியான, ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி 10 லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், கருணாஸ் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள தவறினால் தூத்துக்குடி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கலவரபூமியாகும் என்று எச்சரித்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
நான் ஒரு பயங்கரமான ஆஃப் ஸ்பின்னர்.. விளையாட்டு வீரர்களுடன் சில்லாக வைப் செய்த முதல்வர் ஸ்டாலின்