
2017 டிசம்பர் 21-ம் தேதியான இன்று தி.மு.கவுக்கு மிகப்பெரிய சோதனை நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் துள்ளிக் குதிக்கிறது தி.மு.க. காரணம்?
கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாக தி.மு.க.வை வெச்சு செய்து கொண்டிருந்த எதிர்கட்சிகள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்திருக்கின்றன என்றே கூறலாம்.
‘சட்டப்பூர்வமாக குற்றச்சாட்டை சி.பி.ஐ. நிரூபிக்கவில்லை’ எனக்கூறி ஷைனி இந்த தீர்ப்பை அளித்துள்ளார்
கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் கருணாநிதியிடம் அவரது உதவியாளர் சத்யா இந்த தீர்ப்பை பற்றி சொல்லி ‘கனியம்மா விடுதலையாயிட்டாங்க’ என்று சொல்ல ஓரளவு நிலை புரிந்து புன்னகைத்திருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா....
திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், "அநீதி வீழும் அறம் வெல்லும்” என தன் கையால் எழுதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்
இதற்கு முன்னதாக,பிரதமர் சென்னை வரும் போது,திமுக தலைவர் கருணாநிதி அவர்களை அவருடைய கோபாலபுரத்தில் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.
அப்போது,வெளியில் கூடியிருந்த தொண்டர்களை கை அசைத்தார் கருணாநிதி.கை அசைவிற்கே பெருத்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகம் இருந்தது. இந்நிலையில்,கனிமொழி மற்றும் ராசா விடுதலையை அடுத்து,கையெழுத்தே போட்டுள்ளார் மு.க....