என் உயரம் எனக்கு தெரியும்...அன்றே பிரதமர் பதவி வேண்டாம் சொன்ன கருணாநிதி!

 
Published : Jul 31, 2018, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
என் உயரம் எனக்கு தெரியும்...அன்றே பிரதமர் பதவி வேண்டாம் சொன்ன கருணாநிதி!

சுருக்கம்

Karunanidhi said the Prime Minister not to post

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத ஒரே தலைவர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்தே ஒன்று. கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தி.மு.க.வின் முதல் தலைவராக பொறுப்பேற்றவர். திராவிட இயக்கத்தினை இம்மண்ணில் ஆழ வேருன்றசெய்திட்டவர் திமுக தலைவர் கருணாநிதி ஆவார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் அடித்துநொறுக்கி சமத்துவ சமூகம் அமைந்திட அரும்பாடுப்பட்டவர். 

உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலையை அறிந்து கொள்ள இந்திய அரசியல் தலைமைகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த அரை நூற்றாண்டு காலமாக கலைஞர் இந்திய அரசியலின் அச்சாணியாக திகழ்ந்தவர். 

அத்தகைய கலைஞருக்கு இந்தியாவிற்கு பிரதமராகும் வாய்ப்பு 1996-ம் ஆண்டு தேர்தலின் போது கிடைத்தது. காங்கிரஸ் இல்லாவிடில் பாஜகவே மத்தியில் ஆட்சியமைக்க கூடும் என கருதப்பட்டது. ஆனால் திடீரென மாநில கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணிக்கு அச்சாணியாக திமுக தலைவர் கருணாநிதி திகழ்ந்தார். 

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வென்றதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் பிரதமராக கூடிய வாய்ப்பை திமுக தலைவர் கலைஞரை எட்டியபோது, ஆனால் 
என் உயரம் எனக்கு தெரியுமென அதனை கலைஞர் கருணாநிதி மறுத்துவிட்டர். அதன் பின்னரே கலைஞரின் ஆதரவுடன் தேவகவுடா பிரதமர் ஆனார்.திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்திய தலைமை, மாநில சுயாட்சியின் மீதான பற்று தமிழ் - தமிழர் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தியே தமது அரசியல் களம் அமைந்திட வேண்டுமென கலைஞர் விரும்பியதன் காரணத்தினாலேயே பிரதமர் பதவியை மறுத்தார்.

PREV
click me!

Recommended Stories

காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!