திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் நடைபெற்ற இறுதி போரில், அனைத்து பகுதிகளையும் இலங்கைப் படை கைப்பற்றியது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இறுதிப் போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அளித்த பேட்டியில், இலங்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
undefined
நீரில் மிதக்கும் ரேஷன் அரிசி: பீதியடைய வேண்டாம் - என்ன காரணம்?
நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் எனவும், அவரிடம் நீங்கள் என்ன கேட்பீர்கள்? எனவும் தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழச்சி அளித்த பதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இதுபோன்று பேசுவது காங்கிரசில் யாருக்கும் பிடிக்காது. 17 தமிழர்களுடன் சேர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை மழுப்புவது ஏற்கத்தக்கது அல்ல. இதுபோன்று பேசுவது, வீரப்பன், தமிழ் தேசியம் என்பது இந்துத்துவா தேசியவாதத்தைப் போன்றது.” என பதிவிட்டுள்ளார்.