
கன்னியாகுமரி
திருவட்டாறு எக்செல் சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் மின் அணுவில் எரியும் கார்த்திகை அகல் விளக்குகளை வடிவமைத்து சாதித்துள்ளனர். இவர்களுக்கு பள்ளி தலைவர் மற்றும் இயக்குநர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை மாதத்தில் வீடுகள் மற்றும் கோயில்களில் கார்த்திகை அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவது வழக்கம்.
இந்த நிலையில் திருவட்டாறு எக்செல் சென்ட்ரல் பள்ளியின் 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மின்னணு அகல் விளக்குளை வடிவமைத்து உள்ளனர்.
இதுகுறித்து இம்மாணவர்களின் வழிகாட்டியான ஆசிரியர் ராஜஸ்ரீ கூறியது:
"எக்செல் சென்ட்ரல் பள்ளியில் தொடக்க நிலை ரோபோட்டிக் பாடம் பயிலும் மாணவர்கள் எரியும் கார்த்திகை அகல் விளக்குகளை வடிவமைத்து உள்ளனர்.
மண் அகல் விளக்கில் மின்னணு கருவிகளை பொருத்தி இந்த விளக்குகளை வடிவமைத்து உள்ளனர். சாதாரண கார்த்திகை அகல் விளக்குகள் எரிவது போல் இந்த மின்னணு விளக்குகளும் எரியும்.
இந்த விளக்குகளுக்கு "கார்த்திகை டயா' என்று பெயரிட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
மின்னணு கார்த்திகை அகல் விளக்குகளை வடிவமைத்த மாணவர்களை பள்ளித் தலைவர் ஸ்ரீகுமார், இயக்குநர் பிருந்தா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.