தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளது, இதனை அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் துணை முதலமைச்சர் சிவகுமார் நேற்று வெள்ளிக்கிழமை அளித்த தகவலின் படி, அண்டை மாநிலமான நமது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குடிநீர் தேவை மற்றும் குறைந்த அளவிலான மழை உள்ளிட்டவற்றையும் மனதில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். துணை முதல்வரான சிவகுமார், நீர்வள அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் திறப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய ஜல்சக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி அதை நேரில் கொடுத்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை கண்டிப்பாக மதிக்க வேண்டும் என்றும். தங்களுக்கும் போதிய மழை பெய்யவில்லை என்றாலும் அரசின் உத்தரவை மதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தங்களது குடிநீர் தேவைகளை மனதில் வைக்காமல் தங்களால் தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும். ஆகவே அதை மனதில் கொண்டு தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறினார். கர்நாடகாவில் இன்று, நாளை ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம் என்றும், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நல்ல மழை பெய்தது, ஆனால் இந்த ஆண்டு குறைவாகவே பெய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தங்கள் குடிநீர் தேவைக்கான நீரை பற்றி யோசிக்கும் அதே நேரம், நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் தான் மதிப்பதாக சிவகுமார் தெரிவித்துள்ளார். ஆகவே எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
குட்நியூஸ்.. முதியோர், கைப்பெண்கள் உதவித்தொகை உயர்வு.. எந்த மாதத்தில் இருந்து தெரியுமா?