காரைக்குடி டூ நியூயார்க்... அமெரிக்க மாப்பிளையை கரம்பிடித்த காரைக்குடி பெண்.. திருமண வீடியோ..

By Ramya s  |  First Published Jan 23, 2024, 11:36 AM IST

காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்த நபரை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.


இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளில் வசித்து வேலை செய்து வருகின்றனர். இதனால் இந்திய பெண்கள் வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்வது அல்லது இந்திய ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டது. அந்த வகையில் தற்போது காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளார்.

அதுவும் பாரம்பரிய செட்டிநாட்டு சடங்குகளுடன் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்துள்ளார் காரைக்குடி மணமகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த முத்துப்பட்டினத்தில் வசித்து வரும் சிதம்பரம் – மீனாள் தம்பதியின் மகள் தான் பிரியா. இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரபல மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

Latest Videos

பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்ப்போம்- உதயநிதி

பின்னர் ஒரு டேட்டிங் ஆப் மூலம் நியூயார்க்கில் வசித்து வரும் சாம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில், தனது காதல் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து சம்பளம் பெற்றுள்ளார். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தமிழ் கலாச்சார முறைப்படி சொந்த ஊரில் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

 

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு!

அதன்படி செட்டிநாடு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி நேற்று பிரியா – சாம் தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அமெரிக்க மணமகனின் உறவினர்களும் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மாவிலை தோரணம், அரசனிக்கால் மணவறை, நாதஸ்வர கெட்டிமேளம் முழங்க பாரம்பரிய செட்டிநாட்டு சடங்குகளுடன் அமெரிக்க மாப்பிள்ளையை கரம் பிடித்த காரைக்குடி மணமகள். ஒரேவண்ண பாரம்பரிய உடையில் பாரம்பரிய பங்களாவில் வலம் வந்து மணமக்களை வாழ்த்திய அமெரிக்க தம்பதிகள் நண்பர்கள் உற்சாகம் pic.twitter.com/ZQCMQmZqPZ

— arunchinna (@arunreporter92)

இதுகுறித்து மணமகள் பிரியா பேசிய போது “ நான் ஒரு டேட்டிங் ஆப்பில் இவரை சந்தித்தேன். அதன்பிறகு நாங்கள் காதலிக்க தொடங்கினோம். இருவரும் நிறைய பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். எங்கள் காதல் பற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்து சம்மதம் பெற்றோம். எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன் பிறந்த ஊரில் திருமணம் செய்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவிதுதார்.

click me!