ஜெயேந்திரர் இடத்தை பிடித்தார் விஜயேந்திரர்...! 70 ஆவது மடாதிபதியாக நியமனம்..!

 
Published : Mar 02, 2018, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
ஜெயேந்திரர் இடத்தை பிடித்தார் விஜயேந்திரர்...! 70 ஆவது மடாதிபதியாக நியமனம்..!

சுருக்கம்

Kanji Math is not a refusal to say no

காஞ்சி மடத்தின் 70 ஆவது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர்  சுந்தரேசன்  ஐயர் வெளியிட்டுள்ளார்.

 1954ம் வருடத்தில் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற ஜெயேந்திரர் மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திரர் மறைவுக்குப் பிறகு, 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த பல வருடங்களாகவே அவருக்கு சர்க்கரை நோய் இருந்துவந்தது. அதற்கென சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து தற்போது இளைய மடாதிபதியாக இருந்த விஜேயேந்திரர் அடுத்த மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

காஞ்சி மடத்தின் 70 ஆவது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம் செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர்  சுந்தரேசன்  ஐயர் வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு