
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காஞ்சிபுரம் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்பொழுது காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாநகராட்சியை முதல் பெண் மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் நகர செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் மகள் சசிகலா , மாநில வர்த்தக அணி துணைச் செயலராக உள்ள ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா , திமுகவில் இணைந்த முன்னாள் பாமக பிரமுகர் உலகரட்சகன் மருமகள் சூர்யா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமி ஆகியோர் மேயர் பதவிக்காக மல்லுக்கு நிற்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை நகர செயலாக இருந்தவரும் வள்ளிநாயகம் மனைவி சுசீலாவிற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.