
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டிவிட்டர் பதிவில், அகில இந்திய விவசாயிகள் கட்சியில் சேருங்கள் என்றும், பசிக்கு மதமில்லை எனவே அனைவரும் சேருங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மைக் காலமாக அரசியல் வானில் ஆவேசத்துடன் செயல்பட்டு வரும் கமல்ஹாசன், கேரளா மேற்கு வங்கம் என்று சென்று வந்தார். ஆறுகள் ஆக்கிரமிப்பு குறித்து பேசினார். பின்னர் மணல் விவகாரம் பற்றி பேசினார். பிறந்த நாளில் கட்சி குறித்து பேசினார். இந்நிலையில், இன்று விவசாயிகள் கட்சியில் அனைவரும் சேருங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம். என்று கூறியுள்ளார்.