
மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் எனவும் இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என எச்சரித்துள்ளது.
ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்புக்குழு, 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் எனவும் இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.