கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம்: அரசு அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய தமிழ்நாடு அரசு!

By Raghupati RFirst Published Jun 19, 2024, 8:26 PM IST
Highlights

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 40 மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அதிகாரிகளை கூண்டோடு மாற்றியுள்ளது தமிழ்நாடு அரசு. கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் என்பவரை கள்ளக்குறிச்சி போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் கூடத்துக்கு அனுப்பப்பட்டு, சோதனையில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அனைவரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Latest Videos

கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை தீர விசாரிப்பதற்காக சிபிசிஐடி வசம் ஒப்படைப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன்குமார் ஜடாவத், இ.ஆ.ப., உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு சமய் சிங் மீனா, இ.கா.ப அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

click me!