கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை முதல் சிறப்பு முகாம்!

Published : Aug 17, 2023, 08:57 PM IST
கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை முதல் சிறப்பு முகாம்!

சுருக்கம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி தருமபுரி  மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

அதன்படி, விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மோடி சுட்ட வடைகள் ஊசிப் போச்சு; தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளும் - ஸ்டாலின் பேச்சு!

இந்த நிலையில், மேற்கண்டவாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய உதவும் வகையில், ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, விண்ணப்பங்கள் பெறுதல், களஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி வாயிலாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு