கொஞ்சம் கூட வலு குறையாத கஜா … வர்தா புயல் மாதிரி காத்து வீசும்…. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அதிர்ச்சி தகவல்!!

By Selvanayagam PFirst Published Nov 15, 2018, 6:35 PM IST
Highlights

கஜா புயல்  கரையைக் கடக்கும்போது வலு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் , எதிர்பார்த்தது போல வலு குறையாது  என்றும் மணிக்கு 100 கி.மீ., முதல், 120 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசியபடி இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில், அதி தீவிர புயலான கஜா எதிர்பார்த்தது போல வலுவை இழக்காது என்றும்  அதற்கு பதில், கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே தீவிரமான புயலாக, மணிக்கு 100 கி.மீ., முதல் 120 கி.மீ., வரையான வேகத்தில் காற்று வீசியபடி இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் . தற்போது இந்த புயலை, 'வர்தா' புயலுடன் ஒப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.. 

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும். குறிப்பாக, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் அவற்றின் அருகே உள்ள தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் அவர் கூறியிள்ளார்.. 

கரு மேகங்கள் சூழ்ந்தபடி உள்ள கஜா புயல், முன்பு கணித்தபடி கரையை கடக்கும் வரை வலுவை இழக்கப்போவதில்லை. தீவிர புயலாக தான் கரையை கடக்கும். தமிழக கடற்கரை பகுதியில் இருந்து 150 - 175 கி.மீ., தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

மணிக்கு 25 - 30 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனவே கரையை கடக்க இன்னும் 6 மணி நேரமாகும். அதாவது நள்ளிரவில் தான் கரையை கடக்கும். அதன் தாக்கம் 16ம் தேதி விடியற்காலை வரை இருக்கும். புயல் முழுமையாக கரையை கடக்க நான்கு மணி நேரமாகும். என தமிழ்நாடு வெதர்அமன் தெரிவித்துள்ளார்.

முதலில்  திருவாரூர் மாவட்டத்தில் தான் பலமான காற்று வீச துவங்கும். டெல்டா பகுதிகளில் இதற்கு முன் கடந்த புயல்களை ஆய்வு செய்து பார்த்தால், கனமழை பெய்து இருப்பது தெரிய வரும். இந்த முறையும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும். ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விருதுநகர், கோவை, வால்பாறை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர் மேன் எச்சரித்துள்ளார்..

click me!