ரயில்வே நிர்வாகம் அதிரடி... இனி ரயில்களில் பெண்களுக்கு தனிப்பெட்டி கிடையாது!!!

Published : Nov 15, 2018, 05:44 PM IST
ரயில்வே நிர்வாகம் அதிரடி... இனி ரயில்களில் பெண்களுக்கு தனிப்பெட்டி கிடையாது!!!

சுருக்கம்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி பெண்களுக்கு தனிப்பெட்டி கிடையாது என ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி பெண்களுக்கு தனிப்பெட்டி கிடையாது என ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

நீண்ட தூர ரயில்களில், பெண்களுக்காக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இதுவரை ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்கட்டமாக, திருவனந்தபுரம் - சென்னை மெயில் மற்றும் கொச்சுவேலி - பெங்களூரு ரயில்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத 3 பொது பெட்டிகளில் ஒன்று முதல் 30 வரை பெண்களுக்காக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், பெண்களுக்காக என ஸ்டிக்கரும் அந்த ஒட்டப்பட்டுள்ளன. 

மேலும், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதில், இதுவரை எஸ்எல்ஆர் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பெட்டிகளில் பார்சல் வேன் வசதி கொண்ட பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. தற்போது எல்.எச்.பி., ரக பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புதிய ரக பெட்டிகளில் பார்சல் வேன் வசதி இருக்காது. இதனால், இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!