கோர விபத்து... பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்... சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு

Published : Nov 15, 2018, 11:39 AM ISTUpdated : Nov 15, 2018, 11:41 AM IST
கோர விபத்து... பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்... சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முன்னே சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். 

கடலூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு தனியார் பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அதேநேரம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி அருகே முன்னே சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் பேருந்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. 5 பேர் உடல் நசுக்கி உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் விவரம் தெரிவந்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த சதிஷ் மற்றும் கார்த்திக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் விவரம் குறித்து தெரியவில்லை. 

பேருந்தில் பயணம் செய்த 17 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு கொண்டு சென்றனர். காயமடைந்த 17 பேர் அருகில் உள்ள மருத்துவமகையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!