
• நேற்று (ஜூன் 11 2018) ஒரே நாளில் மட்டும் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர், ஆர்.கே.நகர் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள், கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் பாடல்கள் என ரிலீஸ் படலமாக இருந்தது தமிழ் சினிமா வட்டாரம். ரசிகர்களுக்கு ஹாப்பிதான்...
இதில் விஸ்வரூபம் படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது.
• அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. தற்போது தமிழில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சூட்டிங் பிஸியில் கடந்த சில மாதங்களாகவே வீட்டிற்கு செல்லவில்லையாம் நந்திதா! அவ்ளோ பிஸியா நடிச்சுட்டு இருக்காங்க.
• தமிழ் சினிமாவில் காஜல் அகர்வாலுக்கு என்று ஒரு மார்கெட் உள்ளது. சில ஆண்டுகளாகவே தனக்கு என்று ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரின் முட்டை கண்களை ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். தற்போது பஞ்சாபி மொழியில் நடிக்க ஒப்பந்த ஆகியுள்ளாராம் காஜல் அகர்வால். முதன் முதலாக பஞ்சாப் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் காஜல். தமிழில் குயின் படத்தின் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.
• ’காலா’ படத்தில் கரிகாலனை அன்பால் மிரட்டிய நடிகை கஸ்தூரி ராவ். கஸ்தூரி ராவ் தற்போது பாலா இயக்கிக்கொண்டிருக்கும் வர்மா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். வர்மா படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் ரிலீஸாகி வெற்றிப்பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் படம்தான் ‘வர்மா’.
• நடிகர் சூர்யா தற்போது அதிக கவனம் செலுத்தி நடித்துவரும் திரைப்படம் NGK. இப்படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டில் ‘உங்களை தீபாவளிக்கு சந்திக்கிறேன்’ என ரசிகர்களை பார்த்து பேசியுள்ளார் சூர்யா. தனது படத்தின் ரிலீஸ் தேதியைத்தான் இப்படி சொல்கிறாரோ என கோலிவுட் வட்டாரங்கள் குழம்பி போய் உள்ளனர். சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.
• காலா திரைப்படம் சம்பந்தமான வீடியோக்களை தனது Wonder bar studios யூ டியூப் சேனலில் வெளியிட்டு வந்தார் நடிகர் தனுஷ். இதன் தொடர்ச்சியாகவே ‘கண்ணம்மா...’ பாடலை வெளியிட்டார். இப்பாடல் யூ டியூப்பில் ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது. நேற்று (ஜூன் 11 2018) மாலை காலா படத்தின் இன்னொரு பாடலான ‘தங்கசெல...’ பாடலை வெளியிட்டார். வெளியான சில மணி நேரத்திலயே ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது தங்கசெல பாடல் வீடியோ.