
ஜோதிகா பேசிய வார்த்தையால் யார் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்
பாதிக்கப்பட்டோர்களின் பட்டியலையும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிக்க வரவேண்டும் என்று ரசிகர்கள் பலர் ஆசைப்பட்டனர். இதனால் மனம் மாறி திடீர் என மீண்டும் நடிக்க
எண்ணினார். அதற்கு ஏற்றது போல் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடித்து மிகப் பெரிய வெற்றி
பெற்ற 'how old are you' படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடித்தார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தது. இந்தப்
படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
கடந்த மாதம் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. அதிரடி நாயகியாக நடித்துள்ள ஜோதிகா இந்தப் படத்தின் டீசரில் நச்சுனு 'தே...' என்கிற ஒற்றை
வார்த்தையை பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
பெண்களை இழிவுபடுத்தும் இந்த வார்த்தையை ஒரு பெண்ணான ஜோதிகா பேசியதைக் கண்டிக்கும் வகையில் இயக்குனர் பாலா மற்றும் ஜோதிகா
மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜோதிகா பேசிய வார்த்தை குறித்து மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தல் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
குடியரசு கட்டிசயின் மாநில அமைப்பாள்ர தலித் பாண்டியன், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா மற்றும் டைரக்டர் பாலா மீது வழக்கு
தொடர்ந்தார்.
நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஜோதிகா மீதும் இயக்குநர் பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற விசாரணையின்போது, நாச்சியார் படத்தின்
ஆபாச வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை அளிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜோதிகா பேசிய வசனத்தால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலித் பாண்டியன் மனு மீதான விசாரணை
அடுத்த மாதம் 11 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.