
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நெற்று கோவையில் கைது செய்யப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துவரப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 11 மணிக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர் அழைத்துச் செல்லப்படவுள்ளார்
சென்னை உயர் நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர் கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
ஆனாலும் தொடர்ந்து நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உச்சநீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறைதண்டனை விதித்தது.
இதனைத் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த காண்னை நேற்று கொல்கத்தா காவல் துறையினர் கோவையில் கைது செய்தனர். இதனிடையே கர்ணன் கடந்த 12 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட கர்ணன் விமானநிலையத்தில் உள்ள அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இன்று அவரை கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காலை 11 மணியளவில் போலீசார் அழைத்துச்செல்லவுள்ளனர்.