
அரசு பள்ளிகளின் பாடத் திட்டங்களும் மாற்றியுள்ள நிலையில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு விலையில்ல சீருடை புத்தகம் நோட்டுகள் என அனைத்தும் கொடுத்து பிள்ளைகளை அனுப்பி வைக்க மட்டுமே பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
இந்த அரசாங்க பள்ளி கூடுதலாக ஒரு படி மேல் போய் மாணவர்களை மாலை அணிவித்து தடபுடலாக வரவேற்றுள்ளது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டு புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர்களுக்கு பள்ளியின் மூத்த மாணவர்களை கொண்டுமாலை அணிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஊர்வலமாக அழைத்து வந்து ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.
தமிழக அரசின் விலையில்லா சீருடை,புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கபட்டது. பள்ளி ஆசிரியர் கருப்பையா , ஆசிரியைகள் முத்து மீனாள், செல்வமீனாள் ஆகியோர் வரவேற்பு நிகழ்விற்கான ஏற்பாடுகளைசெய்து இருந்தனர். ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.