சிறையில் அடைக்கப்பட்ட கர்ணனுக்கு நெஞ்சுவலி….கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி…

First Published Jun 21, 2017, 10:21 PM IST
Highlights
judge karnan admitted in hospital for chest pain


கைது  செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோர்ட் அவமதிப்பு குற்றச்சாட்டு அடிப்படையில், ஓய்வு பெற்ற கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, சி.எஸ்.கர்ணனுக்கு, உச்ச நீதிமன்றம்  ஆறு மாத சிறை தண்டனை விதித்து கட்ந்த  மே 9ல் தீர்ப்பளித்தது. 


இதையடுத்த கர்ணனை கைது செய்து, சிறையில் அடைக்கும்படி கோல்கட்டா, டி.ஜி.பி-.,க்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.

 
ஆனால், நீதிபதி கர்ணன் தலைமறைவாகி விட்டதால், அவரை கைது செய்ய முடியவில்லை. தண்டனையை ரத்து செய்யக் கோரி, கர்ணன் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய முயற்சி நடந்தது. இந்த மனுவை, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகம் வாங்க மறுத்து விட்டது.இந்நிலையில்,நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார்,

இதனிடையே  நேற்று கோவையை அடுத்த மலுமிச்சப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கர்ணன் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுத்துவிட்டது.. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கர்ணன், கோல்கட்டா அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் கோல்கட்டா பிரெசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளி்த்து வருகின்றனர்.
 

tags
click me!