
ஓபிஎஸ் அணி சார்பில் எழும்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்று வரும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ், வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிக்கப்படும் என தெரிவித்தார்.
அதிமுக இரண்டாக உடைந்தததையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் தனித்தனியாக இந்த ஆண்டு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஓபிஎஸ்க்கு 11 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓபிஎஸ் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிட்ம் பேசிய ஓபிஎஸ், தாங்கள் தான் உண்மையான அதிமுக என தெரிவித்தார்.
வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தங்கள் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், எம்பிக்களும் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்