பத்திரிகையாளர் லியோ ஸ்டாலின் கைது.. பழைய வழக்கை தூசி தட்டி காவல்துறை அதிரடி!

Published : Feb 01, 2026, 03:24 PM IST
Leo Stalin

சுருக்கம்

ஏற்கனவே 2024ம் ஆண்டு மே மாதம் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கருடன் சேர்த்து லியோ ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக திமுக அரசின் ஊழல், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பரபரப்பு கருத்துகளை கூறி வருகிறார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

லியோ ஸ்டாலின் கைது

இந்த நிலையில் சவுக்கு மீடியா சேனலில் முன்பு வேலை பார்த்த செய்தியாளர் லியோ ஸ்டாலின் என்பவரை சென்னை காவல்துறையினர் நேற்று (ஜனவரி 31) அதிரடியாக கைது செய்துள்ளனர். அதாவது லியோ ஸ்டாலின் ச‌வுக்கு ஊடகத்தில் பணியாற்றியபோது, அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் புகார் மற்றும் மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சவுக்கு சங்கருடன் ஏற்கெனவே கைதானவர்

சென்னை ஆலந்தூர் அருகே உள்ள லியோ இல்லத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே 2024ம் ஆண்டு மே மாதம் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கருடன் சேர்த்து லியோ ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து லியோ ஸ்டாலின் சவுக்கு மீடியாவில் இருந்து வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிப்ரவரி மாதத்தில் பிச்சு உதறப்போகும் மழை.. வானிலை மையம் முக்கிய அப்டேட்
கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி