
2026 – 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்திற்கான தேவைகளைப் பட்டியலிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மாநிலத்திற்கான நிதி விடுவிக்கப்படுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
அந்த வகையில் முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “Union Budget 2026 வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
📚 விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி
🚉 கோவை, மதுரை மெட்ரோ இரயில்,
💧 தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
🛤️ புதிய இரயில்வே திட்டங்கள்,
💼 நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.