
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மேடையில் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்துவிடாதபடி நிகழ்ச்சியின் நெறியாளர் உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
ஆனாலும் அவரால் தொடர்ந்து இயல்பான நிலைக்குத் திரும்ப முடியாததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. துரித சிகிச்சையால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எச்.ராஜா மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எச்.ராஜா இப்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.