சென்னையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது திமுக மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக எழுந்த புகாரில் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் அலுவலகத்தின் கீழ்தளத்தில் செயல்படும் கொரியர் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற செய்தியாளர் மீது மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
undefined
இந்நிலையில், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மீது தொடரப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு என்பவரின் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் செயல்பட்டு வரும் “சகாரா எக்ஸ்பிரஸ்” என்ற கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் அங்கு படம் பிடிக்கச் சென்ற பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவரை திமுகவினர் பிடித்து அறையில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
“மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” பிரதமருக்கு இந்தியிலேயே பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்
திமுகவினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.