அரசு பணிக்கு காத்திருப்பவரா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு... 7,783 பணியாளர்களை நிரப்ப ஆணை!

தமிழகத்தில், 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


job in anganwadi : நம் நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.  இத்திட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக், 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் சுமார், 49,500 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 54,440 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும் ஒரு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள்  உள்ளன. குழந்தைகளை பராமரித்து கற்பிப்பது என்ற அரும்பணியை அவர்கள் செய்து வருகின்றனர். 

Latest Videos

அங்கன்வாடி மைய பலவித கோரிக்கைகள் உள்ளன. காலமுறை ஊதியம் வழங்குதல், பணிக்கொடையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்குதல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதுண்டு.

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

இந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் ஒரு கோரிகை தற்போது நிறைவேறப்போகிறது. ஆமாம், காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 3886 அங்கன்வாடி பணியாளர், 305 மினி அங்கன்வாடி பணியாளர், 3592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

அங்கன்வாடி பணியாளர்  வேலைக்கு 12ம் வகுப்பு (SSLC) தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்,  ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியான நாளில், 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அதே நேரம்,  பட்டியல்/ பழங்குடியின வகுப்பினர்/ ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் கூடுதலாக 5 ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டுளளது.

இதேபோல், 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பும்படி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர்களுக்கு மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ரூ.500 முதலீட்டில் தொடங்கிய உணவு தொழில்.. இன்று ரூ.2 கோடி சம்பாதிக்கும் ஒடிசா பெண்கள்!

click me!