Todays Gold Rate: பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்... சரிந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனை!!

Published : Mar 10, 2022, 11:15 AM ISTUpdated : Mar 10, 2022, 11:21 AM IST
Todays Gold Rate: பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்... சரிந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனை!!

சுருக்கம்

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று வெகுவாக சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று வெகுவாக சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறியும் இறங்கியும் வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சரிந்துள்ளது. அதாவது ஆபரணத் தங்கத்தின்  விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சமீபத்திய தகவலின் படி தென்இந்தியாவில் அதிக தங்கத்தை வைத்துள்ள மாநிலமாக தமிழக திகழ்கிறது.

இதனிடையே அண்மைகாலமாக உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கட்சா எண்ணெய், சமையல் எண்ணெய் ஆகிவையின் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சவரன் 40 ஆயிரத்தை எட்டியது. இதனால் இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை முதல் ஏற்ற இறக்குத்துடன் இருந்த நிலையில் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 110 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 910 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 880 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5 ஆயிரத்து 309 எனவும் ஒரு சவரன் 42 ஆயிரத்து 472 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் இன்று வெகுவாக குறைந்துள்ளது. அதனபடி, சில்லறை வெள்ளியின் விலை கிராமுக்கு 260 காசுகள் குறைந்து 74 ரூபாய் 10 காசுகளுக்கும் கட்டி வெள்ளி கிலோ 74 ஆயிரத்து 100 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!