
சென்னையில் இன்று தொடர்ந்து 126 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாய் 43 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயராமல் இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது 126 ஆவது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 91 ரூபாய் 43 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த 2 மாதங்களாகவே பெட்ரோல்,டீசல் விலையில் பெரிதாக மாற்றங்கள் ஏதும் இல்லை. விலை குறையும் என மக்கள் எதிர்பாத்த நிலையில் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் உக்ரைனுக்கு ரஷயாவுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தேர்தல் காரணமாக இதுவரை உயர்த்தப்படாத பெட்ரோல்,டீசல் விலை தேர்தல் முடிவுக்கு பிறகு கடுமையாக உயரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து நிபுனர்கள் கூறிய கருத்துப்படி, தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் அதிகரிக்கும் எனவும் லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.