Old Pension Scheme: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய திட்டம் ரத்து
கடந்த 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜெயலலிதா கையில் எடுத்தார். தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். இதனையடுத்து, தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட பல்வேறு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போன்றே அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்? தமிழக அரசு பரிசீலனை..!
undefined
திமுக தேர்தல் வாக்குறுதி
இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்தது. அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகின.
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளி கல்வி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு பழைய ஒய்வூதியம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறுகையில்;- பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.