பட்டப்பகலில் பயங்கரம்... நகைக்கடை அதிபர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை...

Asianet News Tamil  
Published : Jul 09, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
பட்டப்பகலில் பயங்கரம்... நகைக்கடை அதிபர் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை...

சுருக்கம்

jewellery owner murder in nellai

திருநெல்வேலியில் நகைக்கடை அதிபர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.

திருநெல்வேலி, ஹாமிம்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் நகைக்கடை வியாபாரம் செய்து வந்தார்.

இன்று காலை மேலப்பாளையம் பகுதியில், அலங்கார் தியேட்டர் அருகே இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக அப்துல் காதர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

பின்னர், அந்த மர்ம நபர்கள், அப்துல் காதரை சராமரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அப்துல் காதர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

அப்துல் காதர் இறக்கும் வரை, மர்ம நபர்கள் அங்கேயே காத்திருந்துள்ளனர். பின்னர், அப்துல் காதர் இறந்த பிறகு அவர்கள் தப்பியோடி உள்ளனர்.

இந்த நிலையில், அருகில் இருந்தோர், அப்துல் காதர் வெட்டப்படுவதைக் கண்டு ஓடி வந்தனர். இதனைப் பார்த்த பெண்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். 

உடனே கொலையாளிகள், பொதுமக்கள் கூடுவதைக் கண்டு சம்பவ இடத்தில் இருந்து கண்ணிமைக்கும் வேளையில் தப்பியோடி மறைந்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அப்துல் காதர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை வாங்கல் மற்றும் கொடுக்கலில் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் அப்துல் காதர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சபிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள்..? மின்வாரிய ஊழியருக்கு இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை..
திருப்பரங்குன்றதில் தடை போட நீங்கள் யார்..? தண்டனை கொடுக்க சிவன் இருக்கிறான்!" வெடித்த தர்மேந்திர பிரதான்..!