கலைஞர் டிவிக்கு நோட்டீஸ் - ஜாஸ் சினிமா சார்பில் மான நஷ்ட வழக்கு…!!

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
கலைஞர் டிவிக்கு நோட்டீஸ் - ஜாஸ் சினிமா சார்பில் மான நஷ்ட வழக்கு…!!

சுருக்கம்

கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் வருமான வரி சோதனை என்ற தலைப்பில் சென்னை அண்ணாநகர், தியாகராயநகர், உள்ளிட்ட 8 இடங்களில் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்தில்  சோதனை, ஜாஸ் சினிமா நிறுவனம் அமைந்த இடத்தில் சோதனை , 90 கோடி பறிமுதல் , 100 கிலோ தங்கம் பறிமுதல் என  தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வருகிறது என அந்நிறுவனத்தின் சார்பில் கலைஞர் தொலைகாட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப்ப்பட்டுள்ளது,

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜாஸ் சினிமா நிறுவன வழக்கறிஞர், உண்மையிலேயே வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்திய  பழைய எண் 36, விஜயராகவா ரோடு பிளாட் நம்பர் 1, முதல் மாடி ,தியாகராய நகர் , சென்னை என்ற  இடம் சுஜாதா என்பவரிடமிருந்து 2015 ஆம் ஆண்டு 11 மாத காலத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தனது கட்சிக்காரர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அம்பேத்கார்நகர் கிண்டி என்ற இடத்துக்கு தனது அலுவலகத்தை மாற்றம் செய்து அது முதல் அந்த வளாகத்தில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார், பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட்டு விட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளர்ர்,,

அந்த வகையில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்திய இடம் ஜாஸ் நிறுவன இடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மைக்கு புறம்பாக  கலைஞர் தொலைக்காட்சி சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான ஜாஸ் சினிமா நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தில் சோதனை நடைபெறுகிறது என அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படத்தக்க வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதாக  தெரிவித்துள்ள வழக்கறிஞர் பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

உண்மைக்கு புறம்பான இந்த செய்தியை வெளியிட்ட கலைஞர் தொலைக்காட்சி மீது மான நஷ்டவழக்கு தொடர இருப்பதாகவும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்போது? ரொக்கம் எவ்வளவு? வெளியான முக்கிய அப்டேட்
பின்னங்கால் பிடரியில் அடிக்க.. காங்கிரஸ் தலைவரை ஸ்கெட்ச் போட்டு மடக்கிய தொகுதி மக்கள்..!