மறைந்தார் முதல்வர் ஜெயலலிதா - அப்போலோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது

First Published Dec 6, 2016, 12:30 AM IST
Highlights


முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர் 11.30 மணி அளவில் மறைந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறித்தது. 

 

 கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டது. 

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் விரைவாக குணமடைந்து வந்தார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார். டிஸ்சார்ஜ் தேதியையும் அவரே முடிவு செய்வார் என்று அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து இருந்தார்.

முதல்வருக்கு அனைத்து சிகிச்சைகளும் முடிவடைந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். நடப்பதற்கான பயிற்சி எடுத்துவந்த நிலையில் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆவார்  என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 

 

இதையடுத்து இதயநோய், சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. நேற்று முதல்வருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை கண்காணிப்பில் முதல்வர் இருந்தார்.

 

இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல் நிலை குறித்த வருந்ததக்க செய்திகள் வந்த நிலையில் சரியாக 5.35 க்கு அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தவறான செய்தி என்று கூறப்பட்டது. 

 

இந்நிலையில் இன்று இரவு முதலே அப்போலோ மருத்துவமனையில் பரபரப்பு தொற்றிகொண்டது. பின்னர் படிப்படியாக அவரது உடலை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இரவு 11,30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த்தாக அறிவிக்கப்பட்டது.

click me!